தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் பரபரப்பாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக் கட்சியின் சார்பாகத் தேர்தலை அறிக்கைகளை வெளியிட்டார். அதில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய், ஆண்களுக்குப் பேருந்துகளில் கட்டணமற்ற பயணம் போன்ற வாக்குறுதிகள் மக்களிடையே பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தேர்தலையொட்டி தவெக கட்சியும் தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில், த.வெ.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம், தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அருண்ராஜ் பதிலளித்தார். அதில், “தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக, மக்களின் குறைகளைக் கண்டறிய அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுள்ளோம். அந்த மனுக்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மனுவில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், மக்கள் தங்களின் குறைகளைத் தெரியப்படுத்த ஒரு இணையதள பக்கம் உருக்கப்பட உள்ளது. அதில் மக்கள் தங்கள் குறைகளை மற்றும் பிரச்சனைகளைத் தெரியப்படுத்தலாம். அனைத்து தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டு, அவர்களின் பிரச்சனைகள் பரிசீலிக்கப்படும். மக்களின் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் ஆராயப்பட்டு அதற்கேற்ப தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும். அந்த தேர்தல் அறிக்கையானது ஒட்டு மொத்த தமிழகத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்கும்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வகையில், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. ஏழை எளிய மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், சிறப்பான திட்டங்களை உள்ளடக்கியதாகத் தேர்தல் அறிக்கைகள் இருக்கும். தேர்தல் அறிக்கையினை த.வெ.க தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார். இதுவரை எந்த கட்சியினரும் ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவோம் என உறுதியளிக்கவில்லை. இத்தகைய சிறப்புக்கூறுகளையும் உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/arun-raj-pm-rajumohan-jct-prabhakar-2026-01-20-21-59-08.jpg)