குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்குதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 2006 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள திருக்குறுங்குடி பேரூராட்சியில் மின் பேட்டரி காணாமல் போன வழக்கில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சம்பவத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த, தற்போதைய மயிலாடுதுறை மதுவிலக்குதுறை டிஎஸ்பி சுந்தரேசன் ஆறு பேரையும் கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தார்.

Advertisment

கடந்த 14 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டி பலமுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டிஎஸ்பி சுந்தரேசனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசன், அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக எடுத்து செல்லப்பட்ட தனது காவல் வாகனத்தை உயர்அதிகாரிகள் தர மறுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment