Advertisment

“விளாத்திகுளத்துக்குனே இந்தமாதிரி அரிசி அனுப்புறீங்களா..? - மண்டல மேலாளரிடம் காட்டம் காட்டிய எம்.எல்.ஏ!

1

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட A.லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு பகுதி நேர நியாய விலை கடையை தொடங்கி வைக்க விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சென்றார்.

Advertisment

அப்போது கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த அரிசி மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு இதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என நியாய விலை கடை ஊழியரிடம் அறிவுறுத்தியதோடு, அங்கிருந்தபடியே செல்போனில் மண்டல மேலாளருக்கு போன் செய்து விளாத்திகுளம் தொகுதிக்கு தரமற்ற அரிசியை அனுப்பியதற்காக கடிந்து கொண்டதோடு, இதனை அமைச்சரிடம் புகாராகத் தெரிவிப்பேன். விளாத்திகுளத்திற்கென்றே இப்படி அனுப்புறீங்களா..? என்று சரமாரியான கேள்விகளால் மண்டல மேலாளரை ஒரு பிடி பிடித்தவர் உடனடியாக இந்த அரிசியை மாற்றி தரமான நல்ல அரிசியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தமான தொனியில்  எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisment

Thoothukudi vilathikulam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe