Advertisment

“எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரா?” - முதல்வருக்கு இ.பி.எஸ். சவால்!

mks-eps-mic

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.12.2025) திறந்து வைத்தார். அதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், “எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள், ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம் தான். உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பது போல, ரெக்கார்டு. தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

Advertisment

நான் கேட்கிறேன் இதில் 5 சதவிகிதமாவது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா. இது என்னுடைய ஒப்பன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் சொல்லுங்கள். 5 சதவிகிதம் கூறுங்கள். பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பாழாய் போன தமிழ்நாடு, திராவிட மாடலின் நான்காண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதல்வரே... நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான  அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

Advertisment

நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று. அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா?. அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, காலரை (Collar) தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?. 

cm-mks-laptop

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா?. எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?. செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு ஏ.ஐ. (AI) சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே ஏ.ஐ. (AI) சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே-நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!). அப்புறம்... ஏதோ ஓபன் சேலஞ் (Open challenge) என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் பெண்டிங்கில்( Pending) இருக்கிறது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?. அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

dmk admk Challenge edappadi k palaniswami kallakurichi mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe