எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
Advertisment
போராட்ட மேடையில் திருமாவளவன் பேசுகையில், ''போலிங் ஆபீசர் யாராவது நமக்கு தெரிஞ்சவங்க வந்தாக்கூட அவங்ககிட்ட போய் நாம சிரிச்சிட்டு வருகிறோம். 'கொஞ்சம் பாத்துக்கோங்க நம்ம பையங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' என்கிறோம். இதுவே நமக்கு தெரியாத ஆளாக இருந்தால் நாம் ஒன்னும் பேச முடியாது. எந்த ரெகமெண்டேஷனும் பண்ண முடியாது. இதேபோல் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வேண்டியவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பீடத்தில் இருக்கிறார் என்றால் அவங்க இன்புளுயன்ஸ் பண்ணாமல் இருப்பார்களா?  அவ்வளவு நேர்மையானவர்களா மோடியும் அமித்ஷாவும்?  அவ்வளவு நேர்மையானவர்களா பிஜேபி தலைவர்கள்? அவ்வளவு நேர்மையானவர்களா சன்பரிவார் தலைவர்கள்?

நீங்க அதிகாரிகள் நாங்கள் அரசியல்வாதிகள். நமக்கிடையே அந்த அளவு மட்டும் உறவு இருந்தால் போதும். நேர்மையாக நீங்கள் என்ன சட்டம் சொல்கிறதோ அப்படியே செயல்படுத்துங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்மை, திறம் வாய்ந்த அரசியல் தலைவர்களா பாஜகவினர். இன்பப்ளுவன்ஸ் பண்ணவே மாட்டார்களா?  தேர்தல் ஆணையமும் பிஜேபியும் இன்றைக்கு ஒரே நிறுவனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களும் ஒரே நோக்கத்திற்காக செயல்படக்கூடியவர்களாக வெளிப்படையாக இயங்குகிறார்கள். ஆகவே இது வெறும் வாக்காளர் பட்டியலை சீர் செய்கிற நடவடிக்கை அல்ல, வாக்காளர்களை அதிகமாக சேர்ப்பதற்குரிய முயற்சி அல்ல, போலி வாக்காளர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சி அல்ல, அந்நிய தேசங்களிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களை வாக்காளர்களாக மாறுவதை தடுக்கும் முயற்சியும் அல்ல, அவர்களுக்கு ஒரு தேசிய மக்கள் பெயரேடு தேவைப்படுகிறது. அவர்கள் விரும்புகிற இந்தியாவை கட்டமைப்பதற்கு சிஐஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவை சிதைத்து விட்டு மனுவின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம். கோல்வாக்கரின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம்.
Advertisment
அதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு தேசிய குடிமக்கள் பேரேடு தேவைப்படுகிறது. மாற்றுக் கருத்துள்ளவர்களை பலவீனப்படுத்த வேண்டும். எதிர்கருத்து பேசுகிறவர்களை வீழ்த்த வேண்டும். எழுந்திருக்க விடாமல் அவர்களின் இடுப்பெடுப்பை முறிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் வலிமை பெற்று விடாமல் தடுக்க வேண்டும். இடதுசாரி அரசியலோ, திராவிட அரசியலோ, அம்பேத்கரிய அரசியலோ, பெரியாரிய அரசியலோ, தேசியவாத மொழிவழி அரசியலோ தலைதூக்கி விடக்கூடாது இவையெல்லாம் அவர்கள் விரும்புகிற ஒரே தேசம்; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம் என்கிற கனவை நினைவாக்க தடைக்கற்களாக இருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள்'' என்றார்.