Advertisment

'திட்டங்கள் எல்லாம் வந்து சேருதா?- வீட்டில் புகுந்து நலம் விசாரித்த முதல்வர்

b6

'Are all the projects coming to fruition?' - The Chief Minister entered the house and inquired about the well-being Photograph: (dmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

தொடர்ந்து பூத் கமிட்டி மாநாடுகளை திமுக நடத்தி வரும் நிலையில் இன்று திருப்பத்தூரில்  திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதனால் ஜோலார்பேட்டை செல்வதற்கு இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைக்க கட்சி நிர்வாகிகள் என பலரும் வந்தனர். அங்கிருந்த மக்கள் 5000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisment

தொடர்ந்து ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு 5000 உரிமைத் தொகை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை ஊட்டினர். பின்னர் ஒரு பயனாளியின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திட்டங்கள் எல்லாம் வந்து சேர்ந்துள்ளதா?. மாதம் மாதம் பணம் வருகிறதா?செல்போனில் மெசேஜ் வந்திருக்குமே? பிள்ளைங்க எந்த காலேஜில் படிக்கிறாங்க'' என்று விசாரித்ததோடு ''நல்லா படிங்க'' என்று அறிவுறுத்தினார். 

tn govt dmk. mk.stalin dmk thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe