Advertisment

தொல்லியல் பாதுகாப்பு பகுதி; அத்துமீறி வீட்டுமனை அமைப்பு!

Ar

குன்றத்தூர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொல்லியல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தும் தனியார் குடியிருப்புகள் வீட்டுமனை பிரிவுகள் அமைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisment

குன்றத்துார் மலையில், பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதி ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும், மலையின் மற்ற பகுதிகள், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன.இங்கு 1956-57ம் ஆண்டில் நடந்த அகழாய்வில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், கல்லறைகள், ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.

Advertisment

இதனால், குன்றத்துார் மலை சர்வே எண் 1151/1ல் 22.90 ஏக்கர் பரப்பளவு மற்றும் மலை அடிவாரத்தில் 200 மீட்டர் சுற்றளவு, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் ஒழுங்குமுறை பகுதிக்குள் உள்ளதாக, மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்துள்ளனர்.இந்நிலையில், குன்றத்துார் மலை மற்றும் மலையின் அடிவாரத்தை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளன. இதனால், மலை மீது ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட 200 மீட்டருக்கு உள்ளாகவே தனியார் வீட்டுமனைப் பிரிவு,அடுக்குமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதனால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குன்றத்தூர் மலை அடிவாரத்தில் 200மீ சுற்றளவில் மனை பிரிவு அனுமதி, கட்டிட அனுமதி பத்திரப்பதிவு உள்ளிட்டவை வழங்கக் கூடாது என சி எம் டி ஏ குன்றத்தூர் நகராட்சி குன்றத்தூர் சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு தொல்லியல் துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

அதேபோல் சென்னைக்கு அருகே மலை மேல் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் என்பதால் அரசு இந்த பகுதியில் சுற்றுலா தளமாக மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Archaeology kundrathur land
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe