Advertisment

“தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது” - ஆ.ராசா விமர்சனம்

arasa

A.Rasa mp criticizes election commission for SIR

தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா எம்.பி, “அரசியலில் பெற்றிருக்கின்ற உச்சம், உயரம் , எங்களை போல இருப்பவர்களுக்கு தான் அதிகமாக  தெரியும்.  அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் , தந்து கொண்டிருக்கின்ற திட்டங்கள்  ஏராளம். அந்த திட்டங்களை எல்லாம் இந்தியாவில்  இருக்கக்கூடிய மாநிலங்கள் வரவேற்று  நிறைவேற்றுகின்றன.  இப்படிப்பட்ட திட்டங்களை  நிறைவேற்றி அரசாங்கத்தை கையில் வைத்துக்கொண்டு  கடந்த ஓராண்டு காலமாக நாம் தொடர்ந்து  அது எஸ்ஐஆராக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையாக இருந்தாலும் ஓராண்டுகளுக்கு மேலாக தலைவர்ம் அமைச்சர்கள்,  மாவட்டச் செயலாளர் நீங்களும் தொடர்ந்து  ஆற்றி கொண்டிருக்கிற பணிகள் ஏராளம், ஏராளம்,  ஏராளம்.  

Advertisment

ஏன் இத்தனை முஸ்லிம்கள்?.ஏன் இத்தனை  முன்னெடுப்புகள்?. நம்முடைய கட்சிகளில் இருக்கிறது. இதற்கு  முன்னால் நமக்கு எதிரிகள் , இதற்கு முன்னால் நம்மை தேர்தலில் எதிர்த்தவர்கள் இவ்வளவு மோசமானவர்கள் அல்ல.  முன்பு தேர்தல் ஆணயம் ஒழுங்காக இருந்தது.  தேர்தல் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று  நாம்  பூத் ஸ்லிப்பை வைத்திருப்போம். ஆணையம் ஒழுங்கான இருந்தது. ஆணையாளர் ஒழுங்காக  இருந்தார். தேர்தல் நடக்க வேண்டும் என்றால்  இருக்கின்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் கள்ள ஓட்டு போடுவான் என்று நாம் கவனமாக இருந்தோம்.  

இப்போது எஸ்.ஐ.ஆருக்கு பிறகு, நாம்  ஒன்றாக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் திருடனாக  மாறிவிட்ட  காரணத்தினால் இந்த ஓராண்டு காலம் இந்த போராட்டம். தேர்தல் அறிவித்த பிறகு தான் தேர்தல் வேலையை  பார்ப்போம். வேட்பாளர்கள் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் தேர்தல் சூடு பிடிக்கும்.  ஏனென்றால் தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் இல்லை. தேர்தல் ஆணையம் திருடவில்லை. ஆனால் இன்றைக்கு  யார் நியாயமாக இருக்க வேண்டுமோ அங்கே திருடர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்று கூறினார். 

a.rasa rasa SIR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe