கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கம் பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வன்கொடுமையை செய்த குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.  இந்த குற்றம் செய்த கொடூரனை கைது செய்யக்கோரி தேசிய மாதர் தேசிய செம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நடத்தினர்

ந்த கண்டன ஆர்ப்பாட்டமானது, திருவள்ளூர் மாவட்ட மாதர் சங்க பொதுச் செயலாளர்நாகஜோதி தலைமையில் நடைபெற்றது. மேலுன் இதில் மாநில செயலாளர் மூ.கண்ணகி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே. கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஜெ. அருள், மாவட்டக் குழு உறுப்பினர் உமாநாத், ஒன்றிய துணைச் செயலாளர் என். செங்கல்வராயன், ஒன்றிய உறுப்பினர்கள் சேகர், ஜெகநாதன், சுதாகர், செல்வம் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.