ஏ.ஆர்.ரகுமானின் வொண்டர்மென்ட் (Wonderment) இசை நிகழ்ச்சி பிப்ரவரி 14, 2026 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பழைய மற்றும் புதிய ஹிட் பாடல்கள், சிறப்பான காட்சி அமைப்புகளுடன் இடம்பெற்றன.  மேலும் சென்னை மெட்ரோ ரயில் மூலம் ரசிகர்கள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Advertisment

இந்நிகழ்வில் பல்வேறு சிறப்பு விருந்தினர்களும், திரைத்துறை ஆளுமைகளும் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்வித்தார். சமூகவலைத்தள பக்கங்களில் தங்களுடைய இசைத் திறமையை வெளிப்படுத்துகிற பலரை இந்த மேடையில் ஏற்றி ஏ.ஆர்.ரகுமான் அழகு பார்த்தார். அவர்களை இசைக்கவும் வைத்தார். இதை அந்த கலைஞர்கள் பலர், திறமை எங்கிருக்கிறதோ அதை தேடிக்கொண்டு வந்து மேடை ஏற்றி அழகு பார்க்கும் தன்மை கொண்டவர் ரகுமான் சார் என்று பாரட்டி வருகின்றனர்.

Advertisment