தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
அதிமுக தரப்பில் மேலும் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/842-2026-02-04-11-15-43.jpg)