Advertisment

உள்ளே புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை; மயங்கி விழுந்த பெண் வட்டாட்சியர்

039

Anti-Corruption Unit enters; Female Tahsildar faints Photograph: (police)

லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டப்பணிகள் துறையின் தனி வட்டாட்சியராக வள்ளியம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். வள்ளியம்மாள் தொடர்ந்து பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்து வந்தது. இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


Advertisment
இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவரின் தாய் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி உயிரிழந்து விட்ட நிலையில் அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரவேண்டிய ஈமச்சடங்கு தொகையான 22,500 ரூபாயை கோரி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை அணுகியுள்ளார். அதற்கு வள்ளியம்மாள் தனக்கு 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சேகர் தன்னால் 2,500 ரூபாய் மட்டுமே தர முடியும் என தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்.
Advertisment
அதேநேரம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு சேகர் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கவுரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் ரசாயனம் தடவிய 2,500 ரூபாய் பணத்தை சேகரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் காத்திருந்த நிலையில் தனிவட்டாட்சியர் வள்ளியம்மாள் லஞ்சப்பணம் பெறும் பொழுது சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

 

040
Anti-Corruption Unit enters; Female Tahsildar faints Photograph: (thirupathur)
போலீசார் தன்னை சுற்றிவளைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈமச்சடங்கு பணத்தை கொடுப்பதற்காக 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது பிடிபட்ட வட்டாட்சியர் மயங்கி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிகிச்சையில் உள்ள வள்ளியம்மாள் ''என்னை கொன்னுடுங்க சார்'' என அழுது புலம்பும் வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bribe police bribery thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe