தஞ்சாவூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுத்தம் செய்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை, தரம்பிரித்து மக்கும் குப்பைகளை விவசாயிகளுக்கும், மக்காத குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கும் அனுப்பும் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.10 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. ஆகவே இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போர்வாள் கோவிந்தராசு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு விசாரனையில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க தயங்கினால் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று இன்று (24-11-25) நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கமிசனர் சரவணகுமார், பொறியாளர்கள் ஜெகதீசன் (தற்போது பணி ஓய்வு), கார்த்திகேயன் மற்றும் ஒப்பந்தக்காரர் மணிசேகர் உள்பட 4 பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

மேலும் விசாரனை தொடர்ந்து இதில் சம்மந்தப்பட்டுள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு விபரங்கள் அமலாக்கத்துறைக்கு புகார் மனுவோடு இணைத்து அனுப்ப புகார்தாரர் தரப்பு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தஞ்சை மாநகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.