Advertisment

மீண்டும் பயங்கர ரயில் விபத்து- வெளியான முதற்கட்ட பரபரப்பு  தகவல்கள்

a5703

Another terrible train accident - initial sensational information released Photograph: (train Accident)

பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே கோர்பா பேசஞ்சர் ரயில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயில் சென்றுகொண்டிருந்த அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முழுமையாக சேதமடைந்தது. 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டது எப்படி? யாருடைய தவறு என்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 6 பேர் யார் என அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2023 ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட இதேபோன்ற ரயில் விபத்தில் பலநூறு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

chattisgarh train accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe