கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் இயங்கி வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்துள்ளது. இதனை அங்குள்ள பெண்கள் கண்டுபிடித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், குளியல் அறையில் கேமரா வைக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த (04.11.2025) இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கேமரா வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். இத்தகைய சூழலில் தான் பெண்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் கேமராவை வைத்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலாமாரி குப்தா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் ஏன் குளியல் அறையில் கேமரா வைத்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுனர். இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் சிறையில் அடித்தனர். அதே சமயம், தொடர்ந்து அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவரது ஆண் நண்பர் சந்தோஷ் என்பவர் கேமராவை வைக்கக் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பெங்களூரில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் பெங்களூருக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அப்பெண் தவறான தகவலைத் தெரிவித்திருந்தது போலீசாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவரது ஆண் நண்பர் ரவி குப்தா சிங் என்றும், அவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவது குறித்து அறிந்த ரவி குப்தா சிங் பெங்களூருவில் இருந்து அவர் ஒடிசாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இதனையறிந்த போலீசார் அவரை கைது செய்ய நேற்று முன்தினம் (05.11.2025) போலீசார் ஓசூரில் இருந்து ஒடிசாவுக்குச் சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/arrest-2025-11-07-12-23-47.jpg)
அதே சமயம் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ரவி குப்தா சிங்கை டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை விமானம் மூலம் ஓசூருக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் அவரிடம் முறைப்படி விசாரணை மேற்கொண்டு இந்த விவகாரத்தில் பல்வேறு உண்மை தகவல்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
Follow Us