தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்திருக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அமமுக, அன்புமணியின் பாமக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளன.

Advertisment

தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக மற்றும் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இன்று சென்னை விமானநிலையம் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக 'ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறதே அது நடக்குமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''இப்போது இருப்பதே நல்ல பலம்'' என்றார். 'அப்போது ஓபிஎஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்பதுதான் உங்கள் கருத்தா?' என செய்தியாளர்கள் கேட்க, ''அப்படி எல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேர்தல் பணிகள் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நிச்சயமாக எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என பதிலளித்தார்.

Advertisment
743
puthiya tamilakam Photograph: (election)

இந்நிலையில் அதிமுக- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் கிருஷ்ணசாமியிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையுமா என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.