Advertisment

விஜய் பிரச்சாரம் நடந்த பகுதியில் மேலும் ஒரு சட@ம்-போலீசார் விசாரணை

345

Another incident in the area where Vijay campaigned - Police investigation Photograph: (salem)

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

Advertisment

இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (37) என்ற இளைஞர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுராஜின் மனைவியும் உறவினர்களும் கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சுராஜின் உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் அதே சீலநாயக்கன்பட்டியில் விஜய்யின் கூட்டம் நடந்த பகுதிக்கு அருகே ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் 50 வயது மதித்தக்க ஒருவர் இறந்து கிடந்துள்ளார். சடலத்தின் அருகில் மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில்  கிடந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அன்னதானப்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police investigate election campaign tvk vijay Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe