நாமக்கல்லில் பணியில் இருந்த சிறப்புப் பெண் எஸ்ஐ காவல்நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் ஆய்வாளராக காமாட்சி பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு ரோந்து பணிக்குச் சென்ற காமாட்சி பணியை முடித்துவிட்டு மீண்டும் இரண்டு மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/02/a4278-2025-07-02-14-56-45.jpg)
காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறைக்கு சென்ற காவல் ஆய்வாளர் காமாட்சி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. காலையில் வந்த மற்ற காவலர்கள் கதவைத் தட்டியும் திறக்காதல் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காமாட்சி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக ராசிபுரம் டிஎஸ்பிக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெண் எஸ்.ஐ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வந்த காமாட்சியின் உறவினர்கள் அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.