அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 14 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜு பிஸ்வ கர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஜெய் என்ற வடமாநில இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/31/a4612-2025-07-31-16-45-02.jpg)
இதுகுறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றபோது வடமாநில நபர் ஜெய் கழிவறையை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்த போது அத்துமீறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தனியார்ப் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் படித்து வரும் பிற மாணவ மாணவிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் எனக் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிடாததால் அனைவரும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.