தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் இது தீவிரவாத தாக்குதலா? அல்லது விபத்தா? என இந்த சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதேபோன்ற இன்னொரு கார் வெடிப்பு சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் குவிந்திருந்த நிலையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் முதற்கட்டமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் விபத்து என கருதப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/11/011-2025-11-11-18-00-07.jpg)