கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ இன்று (09.01.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த மாநாட்டு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மாநாட்டில், “2026இல் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் அரசாக ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருளை விற்பனை செய்வோர், அதற்குத் துணை புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மத ரீதியிலான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த்திற்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அரசுக்குச் சொந்தமான இடத்தில் விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும்” என பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு முழு அதிகாரம் வழங்கி சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/premalatha-conference-van-2026-01-09-22-19-46.jpg)
இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தமிழ்நாட்டில் தேமுதிகவுக்கு இணையான கட்சி வேறெதுவும் கிடையாது. தேமுதிக அவ்வளவுதான் என்று பேசியவர்கள் இந்த மாநாட்டைப் பாருங்கள். தேர்தல் வந்தால் பேரம் பேரம் என்கிறார்கள். ஆமாம் பேசினேன். பேசுகிறேன். யாரிடம் பேசினேன் தெரியுமா?. எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசுவேன். தொண்டர்களிடம் பேசுவேன். தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சியில் அமர முடியும்.
மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்து கருத்துகளின் படி யாருடன் கூட்டணி வைப்பது என முடிவெடுத்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுவோம். தை பிறந்தால் வழி பிறக்கும். தெளிவாகச் சிந்தித்து, டைம் எடுத்து மகத்தான கூட்டணியை உங்கள் ஒப்புதலுடன் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/premalatha-conference-mic-2026-01-09-22-19-00.jpg)