Annamalai University teachers' struggle continued even at night
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்க வேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பணி உயர்வு, நிலுவைத் தொகை, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும், பல்கலைக்கழகத்திலிருந்து பணி நிறைவு அளித்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அங்கேயே பணி நினைத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 10 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக தேர்வை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம், நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ள அனைத்து கேட்டுகளையும் மூடி விட்டது. ஆனாலும், அலுவலக கீழ் தளத்தில் அமர்ந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இவர்களின் போராட்டத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இரவிலும் போராட்டம் நடைபெறும் என அறிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக் களத்திலேயே தங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow Us