அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உடல் கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு துறைசாரதோர் உடற்கட்டமைப்பு சங்கத்தின் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை மாநில அளவிலான உடல் கட்டமைப்பு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை வேளச்சேரியில் கடந்த 3ம் தேதி நடைபெற்றது.  

Advertisment

இதில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர் பிரிவில் அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பில்  3-ஆம் ஆண்டு பயிலும் மாணவர் முகமது ஆசிப் 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு  50 போட்டியாளர்களில் 3-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

அவருக்கு பதக்கம், சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.  இதை அறிந்த நெய்வேலி என்எல்சி நிறுவன செயல் இயக்குநர் ஜாபர் ரோஸ் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டயப் படிப்பின் இயக்குனர் சரவணன் ஆகியோர் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.  நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனிதிறன் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment