சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிதி சிக்கல் ஏற்பட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அதனையொட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு முழு கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது. அதன் பிறகு பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட நிதி சிக்கலால் பல்கலைக்கழகத்தில் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்து துறைக்கும் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களை பணி மாறுதல் செய்து வருகின்றனர். இதுவரை 6 ஆயிரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழங்கிய பணி மாற்றுதல் பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்கள் உள்ளது என சில ஊழியர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து வந்த பட்டியலை சமூக வலைதளங்களில் கசிய விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடையநம்பியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தமிழக அரசு பல்வேறு துறைகளுக்கு மாற்றி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு உபரியாக உள்ளவர்கள் பட்டியலை அனுப்பி வைத்தோம்.
அந்த ஒரு ஆண்டுகளில் சிலர் இறந்து விட்டார்கள். ஆனால் பட்டியலில் அவரது பெயர்களும் தலைமைச் செயலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த பிறகு அதனை நீக்கிவிட்டு யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் உத்தரவு வழங்கி பணி மாறுதலுக்கு அனுப்பியுள்ளோம். இறந்து போனவர்கள் விபரத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம்.
இதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.