அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியராக பணியாற்றி வந்தவருமான வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றுடன் (31.07.2025) பணி ஓய்வு பெற இருந்த நிலையில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சஸ்பெண்ட் உத்தரவைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரகாஷ் நேரில் அவரிடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேல்ராஜ், துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்த பின்னர் பேராசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இயந்திரவியல் துறையின் கீழ் பணியாற்றிய போது எழுந்த நிதி தொடர்பான முறைகேடு புகாரிலும், துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.