ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராயாவரம் மண்டலம் கோமரிபாலம் கிராமத்தில் உள்ள லட்சுமி கணபதி பட்டாசு ஆலையில் இன்று (08.10.2025) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் வகையில் அச்சம் நிலவுவதாக ராயவரம் காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது விபத்து சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் என் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் உள்ள பனா சஞ்சா உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர விபத்தில் பல உயிர்கள் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணங்கள், தற்போதைய நிலைமை, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். 

Advertisment

மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் பங்கேற்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அம்மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான, ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “கோனசீமாவில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த துயர சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இந்த விபத்தில் சிக்கிக் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை வழங்கவும், தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க உறுதி செய்யவும்  அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment