அரசியல் தலைவர்கள் சில சமயம் வித்தியாசமாக எதாவது செய்து வைரல் ஆவார்கள். அந்த வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்றது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு ஹெலிபேட் தளத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார். ஆந்திர முதல்வர் ஆட்டோவில் வந்திறங்கியது நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மத்தியில் கவனம் பெற்றது.
Follow Us