ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இதில், கடந்த மதம் 28 ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து, பிரதமர் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. மேலும், பாஜக ஆந்திர மாநிலத் தலைவர் மாதவ் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி அமராவதியில் முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விபத்து எப்படி ஏற்பட்டது? இதற்கான காரணங்கள் என்ன? பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான சரியான விதிமுறைகள் என்னென்ன? பட்டாசு தொழிற்சாலைகளுக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன? விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பட்டாசுகள் உற்பத்தியாகின்றன. எனவே, அங்குச் சென்று ஆய்வு செய்யுங்கள். அங்கு ஆலைகளில் எவ்வாறு நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. என்னென்ன வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/chan-2026-03-04-19-52-13.jpg)