அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்கக் கோரிய ராமதாஸ் மனு மீது நடவடிக்கை எடுக்க அனைத்து எஸ்பிகளுக்கும் டிஜிபி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

பாமகவின் அன்புமணி 100 நாட்கள் நடைபயணம் அறிவித்திருந்த நிலையில் இந்த பயணத்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்கப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். எனவே அவருடைய நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். நிறுவனருடைய அனுமதியின்றி கட்சியினுடைய பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும் ராமதாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால் திட்டமிட்டபடி அன்புமணி ராமதாஸ் இன்று மாலை திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கி இருந்தார். நாளை செங்கல்பட்டு பகுதியில் நடைபயணம் தொடர்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ராமதாஸ் சார்பில் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி  மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. கட்சியினுடைய நிறுவனர் அனுமதி இல்லாமல் நிர்வாகிகள் சந்திப்பு, பிரசாரப் பயணம் நடத்த அனுமதி இல்லை என டிஜிபி அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், அனைத்து மண்டல காவல் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment