பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகக் கூறிய ராமதாஸ், கட்சி திருடப்பட்டுவிட்டதாக அன்புமணியை மிக காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். இத்தகைய சூழலில், போலி ஆவணங்களை அளித்து பாமக கட்சியை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே, அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் சார்பில் பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி புகார் அளித்தார். இது தொடர்பாக ஜி.கே. மணி போலீசாரிடம் அளித்துள்ள மனுவில், அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பா.ம.க கட்சிக்கு ராமதாஸ் தான் தலைவர் என்றும், அன்புமணி கொடுத்த போலியானது என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக ராமதாஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், அன்புமணியின் தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு இன்று (07-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராமதாஸ் தன்னை தானே தலைவராக அறிவித்துக் கொண்டார் என பத்திரிகைகளில் செய்தி வந்தது. கட்சியை நிறுவியது அவர் தான். அதனாலேயே அவர் தலைவராக அறிவித்துகொள்ள முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி, பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம். அன்புமணியுடைய பதவி காலத்தை 2026 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் இரண்டு முறை கடிதம் கொடுத்தது. அதை எதிர்த்து தான் அவர்கள் நீதிமன்றத்துக்கு போனார்கள். அதை டெல்லி நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மாம்பழம் சின்னம் பா.ம.கவுக்கு இல்லை என்று எந்த இடத்திலும் நீதிமன்றம் சொல்லவில்லை. எந்த பகுதியிலும் சின்னம் தொடர்பான கருத்தை நீதிமன்றம் சொல்லவில்லை. 2026ஆம் ஆண்டு வரை அன்புமணி தான் தலைவர் என்று அங்கீகரித்த கடிதத்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெறவில்லை. நீதிமன்றமும் 2026 வரை கொடுத்தது தவறு என்று சொல்லவில்லை.

Advertisment

அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று உங்களுடைய தரப்பை நியாயப்படுத்த வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. நீங்கள் தான் பா.ம.க, உங்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்று சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கி வந்தால் தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யும். இந்த வழக்கில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த நீதிமன்றத்திலும் அவர்களால் வெற்றி பெறவே முடியாது. இதை நான் சவாலாகவே சொல்கிறேன்.

ராமதாஸ் மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. கட்சியினுடைய விதிப்படி விதி ராமதாஸுடைய ஆலோசனையின் பெயரில் அறிவுறுத்தலின் பெயரில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தான் இருக்கிறது. இதை தவிர அவருடைய சபதத்தில் ஒன்று, நான் கட்சியில் எந்த பதவியும் வைக்க மாட்டேன் எந்த தேர்தலையும் போட்டியிட மாட்டேன் என்று சொன்னதின் அடிப்படையில் அவர் எந்தவித பதவியிலும் வகிக்கவில்லை. கட்சியை செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட பதவியில் தன்னை அவர் இணைத்துக் கொள்ளவே இல்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.