பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பா.ம.கவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக இருவருக்கும் இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அன்புமணியை பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான தரப்பு என அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு சில மாதங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம், அன்புமணியின் சென்னை தி-நகரில் உள்ள அலுவலகத்திற்கு பதில் கடிதம் எழுதியது. இதன் மூலம், பா.ம.கவும், பா.ம.கவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு தான் என அன்புமணி தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில்,  தான் தலைவராக உள்ள பா.ம.வுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (11-11-25) கடிதம் எழுதினார். அதில், 1989இல் இருந்து தற்போது வரை நான் தான் கட்சியை நடத்தி வருவதாகவும், என்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி பாஃர்மில் நானே கையெழுத்திடுவதால் நான் தலைவராக உள்ள பா.ம.கவுக்கு தான் மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாம்பழம் சின்னம் நமக்கு தான், அதை ஒன்னும் செய்ய முடியாது என அன்புமணி உறுதிப்பட தெரிவித்துள்ளார். சென்னையில் பா.ம.கவின் அன்புமணி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (12-11-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, “அத்தனை நிர்வாகிகளும் களத்தில் வேகமாக பணியாற்ற வேண்டும். கூட்டணி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நமக்கு எது நல்லதோ அதை நான் செய்யப்போகிறேன். ஒரு தேர்தல் வியூகத்தை நான் வைத்திருக்கிறேன். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

Advertisment

தேர்தல் ஆணையம் நம்மை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள், என்னை கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் நமக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிட்டாங்க. அதை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. ஏ பார்ஃம், பி பார்ஃமில் நான் தான் கையெழுத்து போட வேண்டும் என தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். அதை யாரும் மாற்ற முடியாது. நீதிமன்றத்துக்கு போனாலும், என்ன பண்ணாலும் ஒன்னும் ஆகாது. அதை பற்றி பேசப்போவதும் வேண்டாம். ஆனால், அங்கே இருக்கிறர்கள் ராமதாஸ் பேரை கெடுக்கிறார்கள். அதை மட்டுமே செய்திருக்கிறார்கள். திமுகவின் கைகூலிகளான அவர்கள் தங்களுடைய சுயநலத்துக்காக இதை செய்கிறார்கள்.