தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் திமுக அரசை கண்டித்தும், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக பா.ம.க தலைவர் அன்புமணி சில தினங்களுக்கு முன்பு அறிவிதார். இந்த போராட்டத்தில் திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்தார்.

Advertisment

இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அன்புமணி தரப்பு பா.ம.க இன்று (14-12-25) அழைப்பு விடுத்துள்ளது. அன்புமணி தீவிர ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு, இன்று டிடிவி தினகரனை சந்தித்து அன்புமணியின் கடித்ததை வழங்கி போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே, அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அன்புமணி தரப்பு பா.ம.க அழைப்பு விடுத்துள்ளது.