பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, அன்புமணியை பா.ம.க செயல் தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இதன் காரணமாக, பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது.

Advertisment

இதனிடையே, பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வரும் கொறடா பதவியைப் பறிக்க வேண்டும் என அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் நேற்று சபாநாயகரிடம் மனு வழங்கி இருந்தனர். அதேநேரம் சேலம் பாமக எம்எல்ஏ அருளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தானே கொறடாவாக நீடிப்பதற்கான கடிதத்தை காண்பித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். இப்படி, பா.ம.கவில் தினந்தோறும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் இன்று (25-09-25) சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பா.ம.க சட்டமன்ற கொறடாவாக சிவக்குமாரும், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து பா.ம.க வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எம்.எல்.ஏ அருள் கொறோடா பொறுப்பிலிருந்து நீக்கி மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை நாங்கள் சட்டமன்ற கொரடாவாக தேர்வு செய்திருக்கிறோம் என்ற கடிதத்தை கடந்த  ஜூலை மாதம் 3ஆம்தேதி கொடுத்தோம். அந்த கடிதம் தொடர்பாக இதுவரையில் எந்த முடிவும் சட்டமன்ற செயலகத்திலிருந்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே அது குறித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். பா.ம.க  சட்டமன்ற உறுப்பினராகவும், பா.ம.க நிர்வாகியை போன்றும் ஊடகங்களில் அவர் தொடர்ந்து பேசி வருவது நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே நீங்கள் அவரை பதிவு செய்ய வேண்டும். பா.ம.கவுனுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டவர் கட்சியினுடைய பிரதிநிதியாக அழைக்க முடியாது என்று இந்த இரண்டையும் இன்றைக்கு கொடுத்திருக்கிறோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற எங்கள் கட்சியினுடைய பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸுடைய யபதவி காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தினுடைய நகல் தலைமை தேர்தல் ஆணயத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் எங்களுடைய கடிதம், தீர்மானங்கள் அத்தனையும் பரிசீலனை செய்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதற்கான ஒப்புதலை அளித்து, அதை அங்கீகரித்து அதற்கான கடிதத்தை எங்களுக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த கடிதத்தினுடைய நகலையும் இன்றைக்கு செயலாளரிடம் ஒப்படைத்திருக்கிறோம்.கட்சியினுடைய தலைமை அலுவலகமாக எண்.10 திலக் தெரு என்பதையும் கட்சியினுடைய தலைவர் அன்புமணி என்பதையும் செயலாளர் பொருளாளர்கள் நாங்கள் நடத்திய பொதுக்குழுவையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் சமயங்களில் கட்சி சின்னங்கள் ஒதுக்குவதற்கான அதிகாரம் வழங்குவதற்கான ஏ ஃபார்ம், பி ஃபார்ம் ஆகியவற்றில் கையெப்பமிடும் 

Advertisment

அதிகாரமும் அன்புமணிக்கு தேர்தல் ஆணயத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. மாம்பழம் சின்னமும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்  முழுவதுமாக அனைத்து விதிகளையும் பின்பற்றி, பா.ம.கவுனுடைய 100% தொண்டர்கள் அன்புமணியின் தலைமையை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே இன்றைக்கு நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய இந்த கடிதத்தின் மூலமாக சபாநாயகர் விரைவில் ஒரு முடிவை எடுத்து அறிவிப்பார். ஜி.கே.மணி கட்சியினுடைய சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவித்திருக்கிறோம். அவர் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியினுடைய தலைவராக இருந்தவர். அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கட்சியினுடைய உச்சபட்ச அனைத்து அதிகாரங்கள் அத்தனையும் அவருக்கு வழங்கப்பட்ட இதுவரையில் செயல்பட்டு வந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் சொல்லக்கூடிய செய்திகள் கட்சியினுடைய அடிப்படை விதிகளுக்கு எதிராகவும், கட்சியினுடைய நலன்களுக்கு எதிராகவும் சொல்வது வருத்தமளிக்கிறது. எனவே இந்த முடிவை சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்திருக்கிறார்கள். கட்சியினுடைய தலைவருக்கு தான் உச்சபட்ச அதிகாரம் என்பது எங்களுடையகட்சியினுடைய விதிகளின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால் சட்டமன்ற குழு தலைவரை பொறுத்தவரையிலும் அந்த சட்டமன்ற உறுப்பினர்களுடைய பெரும்பான்மையானவர்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவரைத்தான் அந்த கட்சியினுடைய தலைவராக அறிவிக்க முடியும். எனவே நான்கு பேரில் மூன்று பேர் இணைந்து இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இது சட்டப்பூர்வமானது. இருக்கக்கூடிய பெரும்பான்மையின்அடிப்படையில் இந்த கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது செயலாளருக்கு  நன்று தெரியும். அதை அவரும் இன்றைக்கு தெளிவுபடுத்தினார். எனவே இந்த நேரத்தில் இந்த கடிதத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம்” என்று கூறினார்.