Anbumani says he started my journey in a state of depression
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது.
இத்தகைய சூழலில் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று முதல் சுமார் 100 நாட்களுக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தை அன்புமணி தொடங்கியிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் 100 நாட்களாக அன்புமணி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இந்த நடைப்பயணத்தின் 100வது நிறைவு நாள் பொதுக்கூட்டம் இன்று (09-11-25) தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த நடைபயணத்தை தொடங்கினேன். அடுத்த 108வது நாளில் திமுக ஆட்சி அகற்றப்படும். இந்த நடைப்பயணத்தில் நிறைய கத்துக்கிட்டேன். இந்த நடைபயணம் வாயிலாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது. திருப்பூரில் தொடங்கி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்தரமேளூர் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன். 4 மாவட்டங்களுக்கு மட்டும் நான் செல்ல முடியவில்லை. இந்த நடைப்பயணம் எனக்கு ரொம்ப பிடித்தது. அதற்குள்ளேயே 3 மாதம் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கிறது.
திமுக டெல்டாவை அழித்துவிட்டார்கள். 60 ஆண்டு காலம் ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக இந்த டெல்டாவை எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான ஒரு ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது கிடையாது. நான் போகும் இடங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்தது. இப்படி உடனே தீர்வு வருகிறது என்றால் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் எப்படி தீர்வு கொண்டு வரலாம்” எனப் பேசினார்.
Follow Us