பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி

102

 

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து  நிர்வாகக்குழு பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த குழுவில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள், ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸிடம் இருந்து இதுவரை வந்த அறிக்கைகள், நகல்களில் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்; ஆனால் இன்று வெளியான அறிக்கையில் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

anbumani pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe