பாமகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று டாக்டர் அன்புமணி அண்மையில் அறிவித்தார்.கடந்த 14-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வாங்கப்பட்டு வருகிறது பொது தொகுதிக்கு ரூபாய் 10 ஆயிரமும் மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூபாய் 5 ஆயிரம் கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சோழிங்கநல்லூர் இரா. மோகன சுந்தரம், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வேண்டி ரூபாய் 10 ஆயிரம் கட்டி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும்,  'பசுமை தாயகம்' அமைப்பின் தலைவர் முனைவர் செளமியா அன்புமணி,  அவரின் தந்தை எம். கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான செய்யாரில் போட்டியிட வேண்டி ரூபாய் 5 ஆயிரம் கட்டி விருப்ப மனு செய்தார். 

Advertisment

இத்தனை அடுத்து,   திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு தானக்காக ரூபாய் 10 ஆயிரம் கட்டி விருப்ப மனு செய்தார் மோகன சுந்தரம். இதே போல, அன்புமணி மற்றும் சௌமியாவிற்கு பண்ண கட்டி வருகின்றனர்.  கட்சி தொண்டர்கள் விரும்புவது போல, இவர்கள் இருவரும் மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என பரவலாகப் பேசப்படுகிறது.  

தற்பொழுது பென்னாகரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்  ஜி.கே.மணி என்பதும், ஏற்கனவே 2016 - சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட்ட  போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டுகுறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment