பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவர்களை சந்தித்து ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாக பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வரும் நிலையில், தந்தை ராமதாஸை சந்திக்க மகன் அன்புமணி சந்திக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.