Advertisment

‘யாருடன் கூட்டணி? - அன்புமணி சூசக பதில்!

anbumani-date-che-mic

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 

Advertisment

அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. அதோடு அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

anbumani-silent

இந்நிலையில் சென்னை எழும்பூரில் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு’ நடைபயணத்தின் 100 நாள் முடிவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் தீர்க்கக்கோரி, தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக சென்னையில் காணொளி தொகுப்பை வெளியிட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (28.11.2025) நடைபெற்றது. அப்போது அன்புமணியிடம் செய்தியாளர் ஒருவர், “கவர்மென்ட் டோட்டலி ஃபெயலர் (அரசு இயந்திரம் முழுதாக தோல்வி அடைந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். திமுக அரசை அகற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள். இப்போது திமுக அரசை அகற்றுவதற்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரு அணியோடு நீங்கள் இணைவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு அன்புமணி பதிலளித்து பேசுகையில், “நிச்சயமாக இணைவோம். இன்னும் கொஞ்சம் பார்க்க போகிறீர்கள். விரைவில் பார்க்க போகிறீர்கள். அதற்கு மேலே இன்னைக்கு இப்போது சொல்ல முடியவில்லை. கான்செப்ட்டே அதுதானே. அதாவது  இன்னொன்று,  நான் 100 நாள் சுற்றுப்பயணம் சென்றதில் ஒரு  கிளாரிங்கான ஒன்னு நான் பார்த்தது என்னன்னா அனைத்து தரப்பு மக்களும் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள்” எனத் தெரிவித்தார். முன்னதாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் கடந்த 25ஆம் தேதி (25.11.2025) ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “டிசம்பர் 30ஆம் தேதி பா.ம.க. சார்பில் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். இந்த பொதுக்குழுவில் உறுப்பினர்களின் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Assembly Election 2026 Alliance Ramadoss anbumani ramadoss pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe