கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் எறும்பூர் கிராமத்தில் நெய்வேலி நிறுவனத்தின் 3ஆம் சுரங்கம் அமைப்பதைக் கண்டித்தும் , அத்திட்டத்தை முழுமையாகக் கைவிடக் கோரியும் , “உரிமை மீட்க... தலைமுறை காக்க” என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (12.09.2025) விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “நான் ஓட்டுக்காக எல்லாம் இங்கு வரவில்லை. எனக்குச் சோறு வேண்டும். 

Advertisment

உங்கள் சோறு எனக்கு வேண்டும். என்னைப் போன்ற கோடிக்கணக்கான தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு உங்கள் சோறு வேண்டும். அதனால் தான் நாங்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறோம். எனக்கு மட்டும் இல்லை பிற்காலத்தில் அடுத்த ஆயிரம் வருஷம் இந்த மண்ணில் நெல் விளைய வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருக்கலாம் . அதனை ரிஜெக்ட் பண்ணிக் குறைத்து உங்களை அல்லல்பட வைக்கிறார்கள். என்.எல்.சி. நிறுவனம் வேலையை விட்டுவிட்டு போங்கள். 

உங்களுக்கு வேலை முடித்துவிட்டது. உங்களுடைய பயன்பாடு முடித்துவிட்டது. உங்கள் தேவைகள் தேவையில்லை. இன்றைக்கு எல்லாருக்கும் தனியார் மின்சாரம் வந்துவிட்டது. உங்களுடைய (என்.எல்.சி.) மின்சாரம் தேவையில்லை. அப்படி மின்சாரம் தயாரிக்கிறேன் என்றால் நீங்கள் நிலக்கரியை இறக்குமதி செய்து தயாரித்துக் கொள்ளுங்கள். நிலக்கரியை எரிப்பதால் தான் இங்குத் துகள்கள் வருகிறது. எனவே அதுவும் வேண்டாம். இனி எந்த மண்ணையும் எடுக்கக் கூடாது. முதலமைச்சர்தான் இதற்குக் காரணம்” எனப் பேசினார்.