Advertisment

ஆனைமலையாறு–நல்லாறு திட்ட போராட்டக் குழு உண்ணாவிரதம்!

புதுப்பிக்கப்பட்டது
111

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் கால அட்டவணை வெளியிட்டு, அடுத்து அமையும் ஆட்சியில் கீழே சொல்லப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி  மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டமானது, 01.03.2026,  ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொங்கலூர் – PAP அலுவலகம் எதிரில் நடைபெற உள்ளது. 

Advertisment

இதில் வைக்கப்பட போகும் கோரிக்கைகள்... 60 ஆண்டுகளாக நம் வாழ்வாதாரமாக இருக்க வேண்டிய ஆனைமலையாறு – நல்லாறு அணைகள் திட்டம், “நிறைவேற்றுவோம்… நிறைவேற்றுவோம்…” என்று ஒவ்வொரு ஆட்சியிலும் வாக்குறுதிகளாக மட்டுமே சொல்லப்பட்டு,
நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் மீண்டும் நம்பி ஏமாற தயாராக இல்லை. 

Advertisment

இந்த முறை, நம் வாக்கைக் கேட்டு வரும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும்நாம் வைக்க வேண்டிய ஆணித்தரமான கோரிக்கை ஒன்றே... ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் (Manifesto) முதன்மையான அறிவிப்பாக இடம்பெற வேண்டும்.அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும்,கால அட்டவணை (Timeline) வெளியிட்டு உறுதி அளிக்க வேண்டும்.ஆட்சிக்கு வந்த முதல் நிதியாண்டிலேயே இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். திட்ட ஆய்வுகள், சுற்றுச்சூழல் அனுமதி, கேரளாவுடனான பேச்சுவார்த்தை இவைகளுக்கான தெளிவான காலக்கெடு அறிவிக்கப்பட வேண்டும்.

பணிகள் தொடங்கும் மாதமும் ஆண்டும் தேர்தல் அறிக்கையிலேயே உறுதியாக குறிப்பிடப்பட வேண்டும். வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களிடம் வாக்குறுதி கேட்காதீர்கள்…செயல் திட்டம் (Action Plan) கேளுங்கள். கால அட்டவணை இல்லாத வாக்குறுதி எங்களுக்கு தேவையில்லை. உழவர்களின் ஒருமித்த குரலே அதிகாரத்தின் காதில் விழும்.விவசாயிகளின் ஒற்றுமையே வெற்றியை உருவாக்கும்.

protest river
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe