Advertisment

பால் கறக்கச் சென்ற மூதாட்டியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு!

pdu-mik-old-woman

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அலஞ்சிரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம்.  இவரது மனைவி சிவமாலை (வயது 69). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த ஆண்டு சிவமாலையின் கணவர் அடைக்கலம் இறந்துவிட்டார். அதன் பிறகு மகன்களுடன் வசிக்கும் சிவமாலை பால் மாடு வளர்த்து வருகிறார். தினசரி காலை 4 மணிக்குப் பால் கறப்பது வழக்கம்.

Advertisment

அதே போல இன்று (26.12.2025 - வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கொட்டகையில் உள்ள பால் மாட்டில் பால் கறப்பதற்காக சிவமாலை தனியாக எழுந்து வந்துள்ளார். அப்போது சாலை ஓரம் மறைவில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் சிவமாலை பின் பக்க தலையில் கம்பியால் தாக்கியதும் அடி விழுவதை உணர்ந்த திரும்பிய போது மீண்டும் முன்பக்க தலையிலும் தாக்கிவிட்டு சிவமாலை கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மர்ம நபர் தென்னந்தோப்பிற்குள் ஓடி மறைந்துவிட்டார். 

Advertisment

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அவரை மீட்டு உடனே அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மூதாட்டிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடம் எங்கள் காவல் எல்லை இல்லை என்று சொல்லிவிட்ட நிலையில் கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

inves-1

மூதாட்டி தினசரி அதிகாலை நேரத்தில் பால் கறக்க வருவதை அறிந்த யாரோ தான் மறைந்திருந்து தாக்கிவிட்டு சங்கிலியைப் பறித்துச் சென்றிருக்க வேண்டும். மேலும் மர்ம நபர் ஓடிய பக்கம் உள்ள மோட்டார் கொட்டகையில் எப்போதும் எரியும் மின் விளக்கை அணைத்துவிட்டுத் தான் திருடன் வந்திருக்கிறான் என்கிற கிராம மக்கள் இருட்டில் தோப்பிற்குள் ஓடி மறைந்து சென்ற நபர் என்பதால் ஏற்கனவே இந்தப்பகுதியைப் பற்றி நன்கு அறிந்த நபராக இருக்கலாம் என்கின்றனர். அதோடு தங்கம் விலை உயர உயர நகை திருட்டுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர்.

Investigation Old woman police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe