ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( 65). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். ராஜ்குமார் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
Advertisment
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி விஷம் அருந்தி அவர் தற்கொலைக்கு முயன்றார். ராஜ்குமாரை மீட்ட உறவினர்கள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜ்குமார் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.