மானாமதுரை கன்னார் தெரு கன்னார் மடத்தின் அருகில் சாலையோரத்தில் முனியசாமியாக வணங்கப்படும் கல்லில் கல்வெட்டு. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், இணைச்செயலர் முத்துக்குமரன், தென்னக பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலர் தாமரைக்கண்ணன், கன்னார் தெருவைச் சேர்ந்த செல்வம், சொர்ண பாரதி ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

கல்வெட்டு :

மேடையாகக் கட்டப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்தில் இக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பக்கங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன.  ஒரு பகுதியில் 25 வரிகளும் மற்றொரு பகுதியில் 26 வரிகளும் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் ஆங்காங்கே எழுத்துகள் அழிந்துள்ளன, தொடர்ச்சியாகக் கல்வெட்டை வாசிக்க முடியவில்லை. குறிப்பாக மேல் பகுதி முழுவதும் சிதைந்துள்ளது. ஆகையால் இக்கல்வெட்டு வழங்கப்பட்ட ஆண்டு, வழங்கியவர் விவரங்கள் அறிய முடியவில்லை. இக்கல்வெட்டை முனியசாமி கடவுளாக வணங்குவதால் எண்ணெய் சாத்தப்பட்டு கல் முழுவதும் கருப்பு படர்ந்து காணப்படுகிறது.

Advertisment

கல்வெட்டுச் செய்தி : 

PDU-MUNI

இப்பகுதியில் உழவுக் குடியாய் இருந்தோருக்கு அரச இறையிலியாக முற்றிலும் வரி நீக்கி நஞ்சை, புஞ்சை நிலப் பகுதிகள் கடவுள் குத்தம் வராதபடிக்கு, ஒரு காசு ஒரு பணம் வாங்காமல், வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டைச் சிதைப்பவர் கங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற பாவம் பெறுவர் என்ற பாதுகாப்புச் சொல்லோடு நிறைவுறுகிறது. கல்வெட்டின் எழுத்து அமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு 17,18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும் கருதலாம் என்று தெரிவித்தார்.