கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதன்படி இருசக்கர வாகனம் பிள்ளையார் குப்பம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த காரில் இருந்த மர்ம நபர்கள் கந்தனை விரட்டி விட்டு விட்டு ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்தி விட்டனர். இதில் சாலையில் எரிந்தவாறு வந்த ராஜேந்திரனை மீட்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா, காடம்புலியூர் ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட நான்கு தனிப் படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சித்திரை சாவடி பாடசாலை தெருவைச் சேர்ந்த பார்த்திபன் 24 புகைப்பட கலைஞர் காரில் வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் மகன் பூபதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவரது மனைவி ஜெயப்பிரியா(வயது 24) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ஜெயப்பிரியா கடந்த ஓராண்டாக பண்ருட்டியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று வந்துள்ளார் அப்போது பண்ருட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் மணிகண்டன் (வயது 28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மணிகண்டன் ஜெயப்பிரியா வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதை ஜெயப்பிரியா மாமனார் ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு மோதல் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்களான சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த கோபால் மகன் குபேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து மது அருந்திய போது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ராஜேந்திரனைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/31/cd-pan-issue-1-2026-01-31-11-11-14.jpg)
அதன்படி அவரது நண்பருடன் சேர்ந்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய பார்த்திபன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மணிகண்டன் குபேந்திரன் கொலை முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த ஜெயப்பிரியா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் திருமணத்தை மீறிய உறவு என்ற விவரம் கூட தெரியாமல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுக ஆட்சியில் இளம் பெண்களைப் பலரை வீட்டில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி அதிமுகவினரே திட்டமிட்டு பாலியல் வல்லுறவு செய்ததை மறந்து தற்போது இந்த சம்பவத்தை அரசியல் ஆக்கி வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Follow Us