Advertisment

மனைவியை கத்தியால் குத்திக் கொலை; முன்னாள் டிஎஸ்பி மகனுக்கு வலைவீச்சு!

GH

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன். அதிகாலையில் நடந்த சம்பவத்தால் குளித்தலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஸ்ருதியை தாக்கியுள்ளார். காயமடைந்த ஸ்ருதியை உறவினர்கள் நேற்று நள்ளிரவு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இன்று அதிகாலை அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின்  முதல் தளத்தில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் மயக்கத்தில் இருந்தவரை விஷ்ரூத் கத்தியால் மூன்று இடங்களில்  சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் தப்பி ஓடிய விஷ்ரூத் குளித்தலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இறந்த ஸ்ருதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisment

இதில் விஷ்ரூத்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை படையில் டிஎஸ்பியாக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்ற  ராமசாமி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாரி நடந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

crime hospital karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe