Amit Shah arrives in Trichy - Karaikal under the control of the Special Forces Photograph: (bjp)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். திருச்சி வந்துள்ள அவர் அங்கிருந்து காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று சரியாக 11 மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக காரைக்காலுக்கு வந்து அங்கிருந்து, கோட்டைச்சேரி வழியாக நகராட்சி சந்தை திடலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக பாஜக தேர்தல் ஓவியங்களை திறந்து வைக்கும் அமித்ஷா, நிர்வாகி ஒருவர் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். பெரிய பள்ளிவாசல் என்ற பகுதியில் இஸ்லாமியர் மற்றும் மீனவர்கள் அமித்ஷாவிற்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தனியார் விடுதியில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமித்ஷா வருகை காரணமாக காரைக்கால் பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காரைக்காலில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us