Advertisment

யார் யாருக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?; இறங்கி வந்துள்ள டொனால்ட் டிரம்ப்

tru

US President Donald Trump

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும். இதன் மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். அதனை தொடர்ந்து ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில் புதிதாக அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், எச்-1பி விசா திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (தோராயமாக 84 லட்சம் இந்திய ரூபாய்) கட்டணம் விதிக்கும் உத்தரவில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எச்-1பி விசா மூலம் பயன்பெறுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள் தான். இதற்கிடையில், இந்தியர்களை குறிவைத்து டிரம்ப் எடுத்த இந்த முடிவு அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

Advertisment

இதனிடையே, எச்-1பி விசா பெற 1 லட்சம் டாலர் கட்டணம் யார் யாருக்கு பொருந்தும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்த குழப்பத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, செப்டம்பர் 21ஆம் தேதியில் இருந்து எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே 1 லட்சம் டாலர் கட்டணம் பொருந்தும் எனவும், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் புதுப்பிக்கவோ, நாட்டில் இருந்து வெளியேறிவிட்டு திரும்ப வரவோ புதிய கட்டணம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

donald trump whitehouse America H1B VISA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe