Advertisment

“சரணடையுங்கள், இல்லையென்றால் மரணம் நிச்சயம்...” - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

doniran

america president donald Trump warns Iran

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிக நீண்டகாலமாக மோதல் போக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வந்த வேளையில், அதற்கு ஈரான் இணக்கம் காட்டவில்லை. இதனால், கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

Advertisment

மூன்று நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து இந்த விவகாரத்தில், அரபு நாடுகள் தலையிட்டு அமெரிக்க - ஈரான் ஆகிய நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை உருவாக்கின. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையிலும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது இன்று (28-02-26) இஸ்ரேல், வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் தெஹ்ரானில் புகை மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன, மேலும் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன, வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் ஐரன் டோம் போன்றவை ஏவுகணைகளைத் தடுக்க முயன்று வருகின்றன. மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பிராந்தியத்தில் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்பதால், வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சரணடையவில்லை என்றால் மரணமடைவீர்கள் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஆயுதப்படைகள் மற்றும் அனைத்து காவல்துறையினருக்கும் நான் கூறுகிறேன், இன்றிரவு நீங்கள் உங்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும். எனவே, உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள், நீங்கள் முழுமையான நியாயமாக நடத்தப்படுவீர்கள், அல்லது நீங்கள் நிச்சய மரணத்தை சந்திப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

donald trump America iran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe