தமிழகச் சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த சட்டமன்ற தேர்தலை போன்றே இந்த முறையும் 25 தொகுதிகள் ஒதுக்குவதாக திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியதற்குக் காங்கிரஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியில் சார்பில் 35க்கும் மேற்பட்ட இடங்களையும், இரண்டு ராஜ்யசபா இடங்களையும் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்றொருபுறம் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், திமுக தலைமை இதற்குப் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில் தான் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு திமுக.வுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பேச்சுவார்த்தைகள் நடப்பது வழக்கம்தான். ஒவ்வொரு கட்சியும் கூடுதல் இடங்களைக் கோரும். இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும். இப்போதும் அதுதான் நடக்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/02/selvaperunthagi-pm-4-2026-03-02-15-46-42.jpg)
நாங்கள் இன்னும் சில இடங்களைக் கேட்டுள்ளோம். விரைவில் சுமுகமான முடிவு எட்டப்படும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணி என்பது ஒரு இயல்பான கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி. இதில் கருத்து வேறுபாடு எங்கே இருக்கிறது? ஒவ்வொரு தேர்தலிலும், சிறிய கட்சிகள் கூடக் கூடுதல் இடங்களைக் கேட்கும். எங்களுக்குத் தேவையானதை நாங்கள் கேட்போம்.
நம்முடைய முதல்வர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் அதனைப் பரிசீலிப்பார். எந்த சிக்கலும் இல்லை; எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது," என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான விவகாரம் குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் த.வெ.க.வுடன் பேசவில்லை. நாங்கள் த.வெ.க.வுடன் பேசியதாக யார் சொன்னது?. நான் மாநில காங்கிரஸ் தலைவர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுடன் பேசுவதற்கு எனது மேலிடம் எனக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. எங்களுக்குப் புறவாசல் வழி அரசியல் செய்யும் பழக்கம் இல்லை” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/02/selvaperunthagi-pm-ani-2026-03-02-15-46-07.jpg)