Advertisment

'உறுதி செய்த தேமுதிக...'-அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா விஜயகாந்த்

898

'Alliance with DMK...' - Premalatha Vijayakanth at Anna Arivalayam Photograph: (dmdk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. முன்னதாக நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''கூட்டணி அறிவிப்பு வரும் பொழுது உண்மையிலேயே நீங்கள் எல்லாரும் மிகப்பெரிய சந்தோசத்தில் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். சரியான முடிவை நான் எடுத்து இருக்கிறேன். சரியான நேரத்தில் அறிவித்துள்ளார்கள் என்று நீங்கள் எல்லோரும் மிகவும் பெரிய சந்தோஷத்தில் இருப்பீர்கள். அப்படி அந்த அறிவிப்பு இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுது உங்கள் முன்னே தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

dmdk dmk alliance parties Election premalathavijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe